புத்தக வரிசை

ஒவ்வொருவரின் தேவைகளைப் பொறுத்து அவற்றின் பெறுமதியும் தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால் கல்வி என்பது அனைவருக்குமே பெறுமதியான ஒரு விடயம். கல்வியால் கிடைக்கும் அறிவு ஒரு மனிதனை முழுமையாக்குகின்றது. அவ் அறிவினை எமக்கு வழங்குகின்ற புத்தகங்களோ தங்கத்தை விடவும் பெறுமதி வாய்ந்தவை. நல்ல நூற்களைக் கற்கும் போது நம் அறிவு வளர்வதுடன் சிறப்பானதொரு பக்குவத்தினையும் எமக்கு அளிக்கின்றன. நாம் ஆடைகளை அடுக்கி வைக்கப் பயன்படுத்தும் அலுமாரிகளை விட புத்தக அலுமாரிகளின் பெறுமதி அளவற்றது. அதன் பாதுகாப்பும் அத்தியவசியமானதாகும்.

எம் ஒவ்வொருவரின் வீட்டிலும் கட்டாயம் ஒரு சிறு நூலகம் இருக்க வேண்டும். அப்போது தான் வாசிப்பின் மீது பற்றுதலும் நூல்கள் மீதான ஆர்வங்களும் அதிகரிக்கும். வரிசையாய் அடுக்கப்பட்டிருக்கின்ற புத்தகங்களில் ஒன்றினை தெரிவு செய்து மிதமான ஒளியினைப் பரப்பும் மாலைப்பொழுதில் இதமான தேநீரினைப் பருகிக்கொண்டு நூல்களை வாசிப்பதில் ஒரு தனி சுவை உண்டு. இவ் உணர்வினை நூற்களில் பற்றுக்கொண்டவர்களே அதன் சுகத்தினை உணர்வார்கள். சிறுகச் சிறுக நூல்களை வாங்கி வாசிக்கும் போது எமக்கு நூற்களின் மீது ஈடுபாடு உண்டாகும்.

எனவே, வாசிப்பின் மூலமாக நமது நேரங்களையும் பெறுமதி வாய்ந்தவைகளாய் மாற்றுவோம்.

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (29-Dec-22, 7:13 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
Tanglish : puthaga varisai
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே