புது வருடமே வா

மூவேளை உண்ண உணவு வேண்டும்
முழுதும் செறிய தேகத்திடன் வேண்டும்

முகநூலைக் காட்டிலும் பார்க்கப் பழக
முகந்தெரிந்த நண்பர்கள் சொந்தங்கள் வேண்டும்

உறக்கம் தொலைந்து காணொளிப் பெட்டியே
உற்றதுணை இல்லையென்ற திண்மனம் வேண்டும்

கண்ணிமை மூடியதும் நித்திரை வேண்டும்
கனவுகள் மெய்ப்பட ஆண்டவனருள் வேண்டும்

கத்தியில்லா ரத்தமில்லா சமுதாயம் வேண்டும்
கனிவும் பரிவுமே பாலமாய் வேண்டும்

புதிய வருடமே ஆர்ப்பரித்து வாராய்
புதிய உணர்வுகளைத் தாராய்

எழுதியவர் : சி ராமகிருஷ்ணன் (30-Dec-22, 3:46 pm)
சேர்த்தது : ராமகிருஷ்ணன்
Tanglish : puthu varudame vaa
பார்வை : 223

மேலே