இசை மேதை மதுரை சோமசுந்தரம்
'என்ன கவி பாடினாலும்
உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையோ முருகா';
ஆனையாம்பட்டி
ஆதிசேசய்யர் பாடல்,
நீலமணி ராகம்;
தேவரின் தெய்வம் திரைப்படம்,
'மருதமலை மாமணியே முருகையா'
தர்பாரி கானடா ராகம்;
'மஹா கணபதிம் பாவயே'
கோபிகாதிலகம் ராகம்;
இசை மேதை
மதுரை சோமசுந்தரம்,
பாடிக் கேட்க வேண்டும்,
அருமையான குரல் வளம்,
கேட்டுக் கொண்டே இருக்கலாம்!
என் தகப்பனாரிடம் நெருங்கிய நட்புடையவர்.
என் திருமண வரவேற்பில் 05.09.1968 ல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் இசைக் கச்சேரி செய்தார்.
தெய்வம் திரைப்படத்தில் பாடிய பிரபல பாடல்: ’மருதமலை மாமணியே’