125 மனைவியின் முகத்தாமரை கணவன் முகம் எதிருற மலரும் - கணவன் மனைவியர் இயல்பு 17

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

கதிரவ னனையதங் கணவ ரேர்முகம்
எதிருற மலருமற் றேதி லார்முக
மதியநோக் கிடவிதழ் வாடிக் கூம்புமால்
சதியர்வாண் முகமெனுஞ் சலசப் பூவரோ. 17

- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கதிரவனைப் போன்ற தங்கள் கணவரின் அழகிய முகம் எதிர் வரக் கண்டு மலரும் முகம், பிற அன்னியர்களின் நிலவு போன்ற முகத்தை நோக்கும் போது இதழ் வாடி கூம்பிவிடுவதால் கற்புடைய மனைவியரின் ஒளி பொருந்திய முகம் தாமரை மலர் போன்றதோ என்று இவ்வாசிரியர் கேட்கிறார்.

சதி - மனைவி; கற்புடையவள். வாள் - ஒளி. சலசப்பூ - தாமரை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jan-23, 3:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே