இல்லத்து வாரி சிறிதாயின் பெண்ஊரும் – நான்மணிக்கடிகை 100
இன்னிசை வெண்பா
ஏரி சிறிதாயின் நீர்ஊரும்; இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ஊரும்; மேலைத்
தவம்சிறி தாயின் வினைஊரும்; ஊரும்
உரன்சிறி தாயின் பகை. 100
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
குளம் சிறிதானால் அதிலுள்ள நீர் வற்றி விடும்.
வீட்டில் வருமானங் குறைவானால் மனையாள் நிலை கடந்து போவாள்.
முற்பிறப்பின் நல்வினை குறைவானால் தீவினை பெருகும்.
ஒருவன் வலிமை சிறிதானால் பகைவர் மேற்கொண்டு பெருகுவர்.
விளக்கம்:
வாரி : இடையறா தொழுகுதலென்னும் பொருளால் வருவாய்க்காயிற்று. தவமென்னுங் குறிப்பால் வினையைத் தீவினையென்று உரைக்கப் படுகிறது.
வாரி: Income, resources; வருவாய்,
ஊர்தல் - 1.வற்றி விடும், 2.நிலை கடந்து போவது, 3.தீவினை பெருகுதல், 4.பகை பெருகுதல் என்று பல பொருள்படும்.
tamilvu/library தளத்தின் அகராதிகள் பகுதியில் Tamil Lexicon Vol - 1 to 7 சொடுக்கி அனைத்துச் சொற்களுக்கும் பொருள் பார்க்கலாம்.