491 அழுக்கே உருவாம் பொதுமகளை அடைவார் யாரே – கணிகையரியல்பு 18
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
ஒருவனுண்ட கலத்துண்ண வொருவனுடை யினையுடுக்க
..ஒருவன் றூங்கும்
திருவமளி துயிலமனம் பொருந்தாது பலரெச்சஞ்
..சேர்ப டிக்கம்
பொருவுவேசி யர்வாயெச் சிலையுண்ணப் பலபேரைப்
..புணர்ந்த சுத்தம்
உருவுகொண்ட தனையவர்தோள் சேர்ந்திடவே யெவர்க்குமன
..மொன்றுங் கொல்லோ. 18
– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
உலகில் ஒருவன் உண்ட இலை கலம் முதலியவற்றில் எவரும் உண்ணார்; உடுத்த உடையை எவரும் உடார்; உறங்கும் படுக்கையில் எவரும் உறங்கார்.
பொதுமகள் வாய் பலர் எச்சில் துப்பும் படிக்கம் போன்றது. அவர் வாயெச்சிலை உண்ணவும், வரையறையில்லாமல் எல்லாரையும் கூடி வாலாமை, அழுக்கே-உருவாய்த் திரிந்த அவர்கள் தோளைச் சேரவும் யாருக்குத்தான் மனம் பொருந்தும்?
அமளி - படுக்கை. துயிலல் - உறங்கல். படிக்கம் - எச்சில் துப்பும் ஏனம். அசுத்தம் - வாலாமை; அழுக்கு.