426

மழையில் நனைந்தபடி நீ அழுதால்.....
கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீர் வேண்டுமானால் கழுவப்படலாம்....
கவலையின் சாயல் முகத்தில் மறைவதில்லை....
கனமான இதயம் ஒருபோதும் கரைவதில்லை....

சுகமோ... துக்கமோ...
வாழ்க்கையின் எந்த சூழலையும்
புன்னகையோடு கடந்திடுங்கள்....

உங்கள் சுகத்தால் எவரும் திளைக்கப் போவதுமில்லை...
உங்கள் துக்கத்தில் எவரும் துவளப் போவதுமில்லை.....

இனிய காலை வணக்கம்

எழுதியவர் : வை. அமுதா (2-Jan-23, 9:06 pm)
பார்வை : 42

மேலே