அழகின் பேரழகே என்னருகில் வா 555

***அழகின் பேரழகே என்னருகில் வா 555 ***
அழகே...
மலைகளின்
ராணி ஊட்டி...
அங்கே உலாவரும்
என்னவள் நீ பியூட்டி...
புல்வெளி எல்லாம்
பனிமூட்டம் படந்திருக்க...
பனிமூட்டத்தை கிழித்து
வரும் ஒளியை போல...
அங்கே உலாவரும்
என்னவளை பார்...
ஒற்றைக்கல் மூக்குத்தி
காதோர ஜிமிக்கி...
தென்றலில் அலைபாயும்
மயில் தோகை கூந்தல்...
காதோர மச்சம் சங்கு
கழுத்தை தழுவும் தங்க சங்கிலி...
வானவில் புருவமத்தியில்
அடுக்கடுக்காய் வண்ண பொட்டுக்கள்...
செவ்விளனி மேனியில்
செங்கொய்யா இதழ்கள்...
பால் பன்னு கன்னத்தில் பிரம்மன்
வைத்த திருஷ்டி பொட்டு மச்சம்...
தஞ்சாவூர்
ஓவியகலையில்...
சிறந்த ஓவியம்
என்னவள் நீதானோ...
அழகே பொறாமை
கொள்ளும் பேரழகே...
இன்னும் எப்படி உன்னை
வர்ணனை செய்ய என் பேரழகே.....
***முதல்பூ.பெ.மணி.....***