இரயில் - இரண்டு கவிதைகள்

இரயிலின் கூச்சல்

அமைதியாய்
படுத்து கிடந்த
தண்டவாளத்தை
உரசி உசுப்பி
விட்டு சென்ற
உற்சாகத்தில் கூவென
கூச்சலிட்டு செல்கிறது
அந்த இரயில்

பிரசவிக்கும் இரயில்

மலை பாம்பாய்
நகர்ந்து வந்த
இரயில்
பிரசவித்து வெளியே
தள்ளியது
ஏராளமான பிரயாணிகளை

பிளந்திருந்த
வயிற்றுக்குள்
இன்னும் ஏராளமான
குட்டிகளாய் பிரயாணிகள்

இவைகளை
எங்கு போய்
பிரசவிக்க போகிறதோ?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (5-Jan-23, 11:07 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 75

மேலே