266 போன ஜென்மப் பாபமடி அம்மாளு - அழகு சுந்தரி அழகின் ஓய்வின் நகைச்சுவை
"போன ஜென்மப் பாபமடி அம்மாளு"
ஓய்வின் நகைச்சுவை: 266
அழகு: ஏண்டி! கஷ்டம் இன்னும் தீர்ந்த பாடில்லை! போன ஜென்மம் நிறைய பாபம் செய்துருக்கேன் போலே!! (பாடுகிறார்) போன ஜென்மப் பாபமடி அம்மாளு!! போன ஜென்மப் பாபமடி அம்மாளு!!
சுந்தரி: அட கடவுளே! அப்போ இந்த ஜென்மத்து அக்கௌன்ட் செட்டில் பண்ண நான் அடுத்த ஜென்மம் வரை வெயிட் பண்ணுமா?
அழகு: ஏண்டி பயமுறுத்துறே! அடுத்த ஜென்மத்திலும் நேக்கு விமோசனமே இல்லையே?
சுந்தரி: எப்படியன்னா! உங்க லாஜிக் படி போன ஜென்மப் பாவம்னு சொல்றேள். அப்போ இந்த ஜென்மத்திலே அடியேனை படுத்தினத்துக்கு வட்டியும் முதலுமா நான் திருப்பி கொடுக்கனுமோனா? ஈஸியா போக விட்டுடுவேனா
அழகு: (பாடுகிறார்) சம்போ மகாதேவா! சம்போ மகாதேவா!