315 வெயில் முன் கல்லார் விளக்கு மின்மினியே - கல்விச் செருக்கு 5

கலி விருத்தம்
(விளம் காய் விளம் காய்)

இயலொடு தமிழ்மூன்று மெள்ளவுந் தேராயே
அயர்வறு கலைஞான மறுபதி னோடுநான்கும்
பயனொடு தேர்வாரே பலருள ரவர்முன்நீ
வெயிலின்முன் இடுதீப மின்மினி யாநெஞ்சே. 5

- கல்விச் செருக்கு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் அதனதன் தன்மையுடன் ஒரு சிறிதும் உணர்ந்தா யில்லை.

அயர்வைப் போக்கும் கலைஞானமாகிய அறுபத்து நான்கும் கற்றுப் பயன் தெளிந்தவர் பலர் உள்ளனர்.

அவர் முன்னிலையில் நீ கதிரவன் முன் வைக்கப் படும் மின்மினியை ஒத்த விளக்காக ஆவாய், நெஞ்சே!” என்கிறார் இப்பாடலாசிரியர்.

இயல் - தன்மை. அயர்வு - கவலை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Jan-23, 4:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே