தெய்வம்

உடலை வாட்டும் கொடிய நோயில்
வாடும் ஒருவன் நாத்திகனாய் இருப்பினும்
அம்மா அம்மா என்றே பிதற்றுவான்
அம்மா என்பவள் இயற்கை நமக்களித்த
தெய்வம் என்றால் அம்மா உருவில்
நாத்திகன் காண்பது தெய்வமே அல்லாது
வேறென்ன தெய்வம் மாபெரும் சக்தி
சக்தியை வழிபடுவோர் இதற்கு சாட்சி
ஆனாய், பெண்ணாய் அலையாய் இன்னும்
உருவே இல்லா ஒளி பிழம்பாய்
தாயாய் தந்தையாய் நல்ல ஆசானாய்
இருப்பவன் இறைவனே அறிந்திடு மனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Jan-23, 1:10 pm)
Tanglish : theivam
பார்வை : 141

மேலே