அகவை அறுபதில் விழா
நேரிசை வெண்பா
சோழ வளநாடு தொண்டை குறுநாடு
ஆழ உழாத அறுவடை -- வாழநிதி
செந்நெற் களஞ்சியக் கீழ்வீதி பூர்வீகம்
அந்தமாய் சென்னை அமர்ந்து
நேரிசை ஆசிரியப் பாக்கள்
தந்தையாம் நடராசர் தாயார் லட்சுமி
யீன்ற நற்றவப் புதல்வர் பாஸ்கர்
ஈண்டு எய்தினார் அகவை அறுபதை
எந்திர இயல்பொறிஞ் சரானவர் பொறியியல்
நிபுணர் நல்இல்லத் துணைவேணி யென்பார்
ஒளவைபுகழ் நடரா சர்தமக்கைப் புதல்வியாம்
தந்தை சுப்பிர மணிமணிமே கலைத்தாயாம்
பாஸ்கர் என்பீல்டு குழும திறமை
மிக்க பொறியாளர் அவர்செயல் திறனை
ஆய்ந்தவர் உயர்பதவி தந்து கௌரவம்
செய்ய பல்லாண்டு மெச்சுபணி
செய்து நற்பணி முடித்தோய்வு பெற்றாரே
அகவையும் அறுவது கடந்த தம்பதி
மகன்தீபக் அமெரிக்க வாழ்பொ றிஞ்சராம்
அவரில்லாள் ஜெயலட்சுமி மருத்துவர் அமெரிக்காவில்
பணியாம் ஒரேமகள் அரினி மருத்துவப்
படிப்பு மாணவி அனைவரும்
பல்லாண்டு சிறப்புடன் வாழநிற்கும் தெய்வமே