மயங்குகின்றேன் மையலிலே மாதே நித்தம் - எண்சீர் ஆசிரிய விருத்தம்

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)

மயங்குகின்றேன் மையலிலே மாதே நித்தம்
..மனம்சாய்ந்த வேளையிலே மகிழ்வாய் நின்றே!

இயங்குகின்றேன் என்னவளே இதயந் தன்னில்;
..இல்லறத்தில் உனைச்சேர்த்தே இன்பங் கொண்டேன்!

உயிர்த்துணையாய் நானிருப்பேன் உன்னை யெண்ணி
..உற்சாகம் பெருக்கிடுதே உயிரே நீதான்!

மயிர்பொடித்து நிற்கின்றேன் மாயம் என்ன
..மகிழ்வுடனே செய்தாயோ மனத்தில் வைத்தே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jan-23, 2:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே