186 வறியவர் போல் செல்வர்க்கும் துன்பம் வரும் - உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல் 13

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச் சீர் வரலாம்)

தாழ்ந்தவ ரெனச்செல் வர்க்கும்
= சாப்பிணி மடமை யச்சஞ்
சூழ்ந்தபே ரிடர்கள் பாவந்
= துஞ்சிமண் ணாத லள்ளல்
வீழ்ந்தவ லித்த லாதி
= மிகையெலாம் எய்தும் இவ்வா(று)
ஆழ்ந்தவ் விருதி றத்தார்க்(கு)
= ஆகும்வேற் றுமையா தம்மா. 13

- உயர்ந்தோர் தாழ்ந்தோரைத் தாங்கல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பொருளாதாரத்தில் தாழ்ந்தவரைப் போலவே செல்வர்க்கும் இறப்பு, உடல்நோய், அறியாமை, நடுக்கம், சேரும் பெருந்துன்பங்கள், பாவம், இறந்து மண்ணாகி நரகத்தில் விழுந்து துன்புறுதல் ஆகிய தண்டனைகள் உண்டாகும்.

இவ்வாறு துன்பத்துள் அழுந்திய இருவகையானவர்க்குள்ளும் உண்டாகும் வேற்றுமை ஏது” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.

மடமை - அறியாமை. இடர் - துன்பம். துஞ்சி - இறந்து. அள்ளல் - நரகம்.
அவலித்தல் - துன்புறல். மிகை - தண்டனை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jan-23, 1:34 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே