பேதை மனம்

பாவம் அந்தப் பேதை
மனம்/
பாடுது சோக கீதம்
தினம்/
பாசப் பிணைப்பு பிளவான
வருத்தம்/
பாசாங்கான பாசம் உதறியதால்
ஏக்கம்/
பாட்டிலே கொடுக்கின்றாள் பல
விளக்கம்/
பாவக்காய் வாழ்க்கை கொடுத்த
தாக்கம்/
பாதியில் விட்டவனுக்கு ஏது
துக்கம் /
பாதை மாறிய கால்களில்
தடுமாற்றம் /
பாலமாய் உதவிட உறவில்லாத
ஏக்கம் /
பாடையில் இப்போது அவளின்
தூக்கம் /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jan-23, 1:58 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : pethai manam
பார்வை : 59

மேலே