விளைச்சல் மண்ணைக் காப்போம்

மாதம் மும்மாரி பெய்ய வளமான
மண்ணில் பொன்னாம் நெல்விளையும்
அன்று அப்படிதான் விளைந்து வந்தது
நம் தமிழ் மண்ணில் வேண்டிய நெல்லும்
சோழநாடு சோறுடைத்து ஆனதும் இவ்வாறே
இன்றோ நெல்விளையும் மண்ணையும் கூட
மனிதர் மதிப் பதில்லை மண்ணெல்லாம்
'நாடாய்' மாறுது இங்கே கொஞ்சம்
யோசித்துப் பார் ஒருநாள் விளைச்சலுக்கு
மண்ணில்லாமல் போகும் உலாவரும் இல்லாமல்
உணவுப் பஞ்சம் வரும் அப்போது அப்போது
பொன்னையா மனிதன் உண்பான் ?
யோசிப்போம் இன்றே மண்ணைக் காப்போம்
வளமான விளைச்சல் மண்ணை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (17-Jan-23, 1:54 pm)
பார்வை : 32

மேலே