சிப்பிக்குள் முத்தெடு
விழியை உற்று நோக்கிடு /
விருப்பு நீரை ஊற்றிடு /
இதயறை தனில் நுழைந்திடு /
இரவைப் பகலாய் மாற்றிடு /
உள்ளத்தை வாங்கிடு /
உணர்ச்சியைக் கொடுத்திடு /
காதோரம் அமர்ந்திடு /
காதிலே காதல் சங்கு ஊதிடு /
ஆசை அணுக்களை உசுப்பி விடு /
இரத்த ஓட்டத்தை அதிகரித்து விடு /
உடல் எங்கும் குளிர் மூட்டி விடு /
விரல் தங்குமிடமெங்கும் சூடு ஏற்றி விடு /
அங்கமதை அளர்ந்திடு /
தங்கமென புகழ்ந்திடு /
செங்கரும்பாய் சுவைத்திடு /
செந்தேன் எனக் கதை விடு/
மச்சமதைக் கணக்கெடு /
கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க விடு /
நெஞ்சத்திலே மஞ்சமிடு /
சிப்பியாய் என்னை எடு /
சிப்பிக்குள் முத்தாய் தங்கிடு /
உயிராய் என்னுள் கலந்திடு /
கற்பக் குடல் நிறைத்திடு /
தாய்மை என்னும் வரத்தைக் கொடுத்திடு/
(15-8-19. )
ஏதோ ஒரு போட்டிக்கு எழுதியவை)