கோழி கூறும் கதை பாகம் 1

ஒரு நாள் காலையில் ,தன் உணவுக்காக,
கோழி சென்று கொண்டு 'இருக்கையில்
பக்கத்தில் வந்தமர்ந்த பறைவையைக்'
கண்டது .அருகில் சென்று கொண்டே
இருக்கும் போதே. பறவைகளின் இடையே எழும்
சண்டைச் சத்தம் கேட்டது . உடனே அமைதியாக
நின்று கவனிக்கச் செய்தது கோழி .
ஒரு
பறவை மிகவும் சளிப்புடன் கூறியது.( சீ)
என்ன வாழ்க்கை இது .மேலே=மேலே பறந்து
கீழே வந்து இரை தேடவேண்டிய நிலமை
என்று கூறியது. இதைக் கேட்டதும் மற்றப் பறவை கூறியது
நீ உலகை அறியாத மங்கை .
பூமிமேல் உள்ள
மோகம் உன்னை இப்படியெல்லாம் பேச
வைக்கின்றது இங்கு பல
ஆபத்துக்கள் உள்ளதடி பெண்ணே,
என்று .
இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது
சிறு பறவை .சற்று நேரம் கவனித்த கோழி அருகில்
சென்றது.
நான் உங்கள் சண்டையைக் கண்
உற்ரேன். என் கதையைக் கேட்ட பின்னும்
உனக்கு இங்கே தான் இருக்க ஆசை என்றால்
வா=நான் கூட்டிச் செல்கின்றேன். எனக் க கூறியது சிறு பறவையைப் பார்த்து
கோழி.
பின்னர் கோழி தன் கதையைக் கூற ஆரம்பித்தது.

நான் ஒரு ஏழையின் வீட்டில்
செல்லப் பிள்ளையாக
வளர்ந்தேன்.என்னுடன் பலஉறவுகளும்
வாழ்ந்தனர் .ஒன்றாகவே நாங்கள்
இருப்பது வழக்கம். கூடியே நடப்போம்.
கூடியே உண்போம் .கூடியே குப்பையைக்
கிளறுவோம் .வீட்டுக்குள்ளே சுகந்திரமாக
அங்கும் இங்குமாக உறங்குவோம் .பரன்
மேலும் சோபா மேலும் எங்கள் ஆட்சி தான்.
குடிசை வீடு ஆனால் குறையில்லா உணவு.
குழி போட்டு அள்ளிய நீர் எங்கும் நிறைத்து
வைத்திருப்பார் .சுரட்டையில் எங்கள் வளர்ப்பு
அன்னை . மழலை இல்லாத வீட்டில் மழலையாக
நாங்கள் வளர்ந்தோம். சூ....சூ...என்னும் வார்த்தை மட்டும்
உச்சரித்துக் கொள்வாள் .தடி எடுத்து அடிக்க
மாட்டாள் .வளர்ப்பு அன்னை எல்லையில்லா
மகிழ்ச்சியோடு. எங்கள் இனமும் பெருகியது.
எனக் கூறி கோழி சற்று நிறுத்தி
பெருமூச்சு விட்டது .


கண்ணைத் துடைத்து விட்டு
தொடர்ந்தது கோழி .

பெரிய
கம்பிக் கூண்டில் போட்டார்கள்
அதைப் பார்க்கவும் புதுமையாக
இருந்தது .ஆனால் பயம் வரவில்லை
நாளு பக்கமும் விளக்கின் ஒளி
பரவியது புது இடம் முது முகம்
என்ற அச்சம் மட்டும் தான்.
பெரிய வாளியில் நிறையத்
தண்ணீர் .பழைய சோறு

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Jan-23, 2:43 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : KOZI koorum kathai
பார்வை : 70

மேலே