கோழி கூறும் கதை 2

தேங்காய்ப் பூ என பலவகையான
உணவு இருந்தது .அந்தக் கூண்டின்
பக்கத்தில் சிறு சிறு கூண்டில் கிளி
புறா சிட்டுக் குருவி மயில் என பல
உறவுகள் இருப்பதைப் பார்த்தோம்.
எங்களுக்குள்ஆனந்தம் ஆனந்தம்தான்.
அவர்கள் முகத்தில் அது தென்பட வில்லை.
ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது .அதை அறிய
எங்களுக்கு நெடுநாள் ஆக வில்லை.
எனக் கோழி கூறவே பறவையும் ஆர்வமாக
என்னாச்சி எனக் கேட்டது.

பறவை மிகவும் ஆர்வமாக
கேட்டுக் கொண்டு இருந்தது.
கோழி தொடர்ந்து பேசியது.
கூண்டுக்குள் சென்ற நாங்கள்
எங்கள் குடும்பம் மட்டும்தான்
என நினைத்து மகிழ்வோடு
உணவு உண்டோம். அழகாய்
கம்பியின் வழியே வேடிக்கை
பார்த்தோம் .சில மணி நேரம்
சென்றதும் எங்களைப் போல்
பலரைக் கூட்டிக் கொண்டு
ஒருத்தன் வந்தான் .அவன்
பின்னாடி தடியுடன் வரவே
அந்த உறவுகள் முன்னாடி
ஓடி வந்து கொண்டு இருந்தன.

வந்ததும் அவைகளையும் அவன்
எங்களுடன் ஒன்றாகவே போட்டான்.
நாங்கள் அமைதியாக நின்றோம்
அவன் அடித்த கோபத்தில் அதுங்க
எங்களை முறைப்பாய் பார்த்து விட்டு
தண்ணீர் குடிக்க ஆரம்பித்தது .

அப்போது
மயில் அழும் சத்தம் கேட்கவே எட்டிப்
பார்த்தோம். சில பெண் பிள்ளைகளின்
கொடுமையைக் கண்டு நாங்கள் நடுங்கி
விட்டோம் .பாவம் அந்த மயில்
எனக் கூறியது கோழி. ஆச்சரியமாக
கோழியைப் பார்த்தது பறவை.
பறவையின் முகத்தைப் பார்த்து விட்டு.
கோழி பேச ஆரம்பித்தது .

எந்த மடையன்
கூறிய வார்த்தையோ நான் அறியேன்.
புத்தகம் நடுவில் மயில் இறகு வைத்தால்.
குட்டி போடும் என்று. அதை நம்பி அந்தப்
பாவிப் பெண் பிள்ளைகள் மயிலின் இறகை
பிடிங்கி எடுக்கத் தொடங்கியதன் காரணம்
தான் மயில் அழ ஆரம்பித்தது .
அப்போதும்
அந்தக் கொடுரக் குணம் கொண்ட பிள்ளைகள் விடவேயில்லை .
மயில் வலியில் இரவு வேளையிலும் அழுது
கொண்டு தான் இருந்தது.

எழுதியவர் : ஆர் எஸ் கலா (18-Jan-23, 7:44 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 36

மேலே