கோழி கூறிய கதை 3

அதே நேரம் நாங்களும்
தூங்க வில்லை. எங்களுடன் இணைக்கபட்ட சக
கோழி எல்லாம் எங்களைக் கொத்தி விரட்ட ஆரம்பித்தது.
அதனால் நாங்களும் அழுதுகொண்டுதான்
இருந்தோம். தூக்கமேயில்லை
ஒரே அழு குரல்
தான் .அழுகுரலோடே இரவைக் கழித்தோம்.

காலைச் சாப்பாடும் தண்ணீரும்
கொடுத்தார்கள். எங்களில் சிலரை
தூக்கித் தூக்கிப் பார்ந்தான் அந்த
தடிக்காரன். ஏன் என்று புரியாமல்
நின்றோம் .பின்னர் என் உடன்
பிறப்பையும் அங்கே இருந்த உறவு
இரண்டையும் சேர்த்து மூன்றையும்
விட்டு எங்கள் அனைவரையும் .
அழைத்துச் சென்றான் .
ஒன்றும் புரிய
வில்லை நாங்கள் அவனைப் பார்த்தடியே
சென்றோம் .அவனும் பார்த்துக் கொண்டு
நின்றான் .
என்றுமே நாங்கள் பிரிந்தது
இல்லை .அதுதான் முதல் தடவை.
வந்த உறவுகளும் எதுகும் சொல்லாமல் சென்றன.

அதுங்க கண் கலங்கி இருந்தது .நாங்கள்
அழ வில்லை ஏன் என்றால் எங்களுக்குத்
தெரியாது உறவை இழக்கப் போகின்றோம்.
என்ற விஷயம் ஏனைய கோழி அறிந்துள்ளனர்.
அதனால் அவை அழுதன .
நாங்கள் பிரிவை
நினைத்தோமே .தவிர தம்பி
உயிரை நினைக்க வில்லை .
எங்க வளர்ப்பு அன்னை எங்களைப்
பிரித்ததேயில்லை .ஒன்றாகவே இங்கும்
அனுப்பி வைத்தாள் .
சாயிந்திரம் வீடு வந்தோம்.
தம்பி இல்லை தேடியும் கிடைக்கவில்லை.

அங்கே
உள்ள குட்டி நாய் கூறித்தான் உண்மை புரிந்தது.
அவன் சுவைத்து உண்டானாம் என் உறவின் எலும்பை
என்றான் .வேதனையோடு உறங்கச் சென்றோம்.

அன்று ஆரம்பித்த வேதனை
இன்று வரை தொடர்கின்றது.
இரவு நேரத்தில் உறங்கும் போது
இதயம் பக்குப் பக்கு என்று அடிக்கும்.
நாளை யார் உயிரோ? போகப் போகின்றது.
நாம் யார் காலையில் உணவோ?
நாங்கள் கூடிப் பேசி கவலை கொள்வோம்.

நாங்கள் பயந்தது போல் யாராவது ஒருவரை
பிடித்து விட்டுத் தான் போவான் தடிக்காரன்.
பிடிக்கும் போது துடிக்கும் உறவுகள்
பிள்ளை போல் வளர்ந்தோம் இங்கு
பிச்சித் தின்னும் எமனிடம் மாட்டினோம்.

சரி நீ நாளை வா மீதி உள்ள என்
சரித்திரத்தைக் கூறுகின்றேன்.
சங்கதியெல்லாம் உனக்குப் புரிந்ததா
சங்கடப்படாமல் நாளையும் வா குருவி.
ஐந்து மணி ஆகிடிச்சு .அவன்
ஐயனார் போல் இருப்பான்.
ஐந்தறிவு படைத்த நான் பரவாயில்லை
ஐயா சாமி அவனை விட .

எழுதியவர் : ஆர் எஸ் கலா (18-Jan-23, 7:48 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 36

மேலே