கோழி கூறிய கதை 4

வாரான் தடிக்
காரன் .நான் போகின்றேன் நாளை வா.
கோழி விடை பெற்றுச் செல்கின்றது.
குருவி மரத்தில் இருந்தபடியே சிந்திக்கின்றது.

பறவையும் சிறுது நேரத்தில் சென்று விட்டது.
சென்ற பறவை இரு நாள் வரவில்லை. மழையின்
காரணத்தால் .மூன்றாம் நாள் சாய்ந்திரம் வந்து
அமர்ந்தது மரத்தில்.அப்போது அங்கே கோழி இல்லை.
வரும் வரை நாம் ஏதாவது வேடிக்கை பார்க்கலாம்.
என்று பறவை சற்றுத் தள்ளி இருந்த ஒரு மரத்தில்
போய் அமர்ந்தது. அப்போது ஒரு குட்டிப் பூனை ஏதோ
ஒன்றை மிகவும் விரும்பி உண்டு கொண்டு இருக்க
பறவை வேடிக்கையாகப் பார்த்தது. திடிரன தலையைத்
தூக்கிப் பார்த்த பூனை பறவையை முறைத்தது. அப்போது
பறவை பயந்தே போனது பின்னர் பூனை சாப்பாட்டில்
தன் கவனத்தைச் செலுத்தியது. அப்போது ஒரு காகம்
தன் வாயில் ஒரு துண்டு எழும்பைத் தூக்கியவாறு வந்தமர்ந்தது அதே மரக்கிளையில் .அந்த சிறு பறவையும்
அதைப் பார்க்க அதுகும் பார்த்தவண்ணம் கூறியது.
இன்று இந்த வீட்டில் விருந்து நல்ல சுவையான கறி.
என்று என்ன கறி என்று பறவை
கேட்கவே காகம் கூறியது.
ஒரு பெரிய சேவல் கோழி என்று .
பறவை அதிர்ச்சியுடன்
எப்படித் தெரியும் எனக் கேட்டது .
அப்போது பூனையும் கூறியது.
ஆமாம் பறவையே அது உன் நண்பந்தான் எனக் கூறிச் சிரித்தது.
பறவை கடும் வேதனையுடன் மனம் நொந்து
மறு மொழி போசாது மௌனம் ஆனது. ஆனால் அது
பல விஷயங்களைச் சிந்தித்தது .
தன் வாரிசு பார்க்க
கோழி கொடுத்து வைக்கவில்லையே. இந்த மனிதன்
ஏன் இரக்கம் அற்ற உள்ளம் கொண்டான். தனக்கு உணவுக்காக பறவையக் கொல்லுகின்றான். வேண்டுதல் என்றும்
பறவை==மிருகம் அனைத்தையும் கொல்லுகின்றான்.
தங்க ஒரு இடம் இல்லாமல் .மரத்தையும் அழிக்கின்றான் . இறுதியில்
இவன் வாழ்வு என்ன நிலமையாகப் போகின்றதோ? அதைப்
பார்க நான் இருக்க மாட்டேன் .
என்று தான் வேதனை .அட
பாவிங்களா அவனையுமா உண்டு விட்டீர்கள். வேண்டாம்
இந்த மனிதனுடைய நிழலும் பாசமும் மலைமேல் ஏறி
விண்ணைப் பார்ப்போம்.
தலை குனிந்து இனிமேல் இந்த
மண்ணையும் பார்க வேண்டமெடா சாமி என்று முடிவு எடுத்த பறவை .
வழமையாக எட்டடி உயரத்தில் பறக்கும்.
இன்று பத்தடிக்கு மேலே உயரப்பறக்கின்றது .பூமியைப்
பார்க்காமலே வேதனையைச் சுமந்த படி.

(முற்றும்)

எழுதியவர் : ஆர் எஸ் கலா (18-Jan-23, 7:52 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 74

மேலே