கரம் பிடிப்பேன்
மஞ்சு விரட்டும் போட்டியில்
எந்தன் முகம் கண்டவுடன்
உந்தன் மஞ்சள் பூசிய முகம்
நாணத்தில் சிவக்க
விழிகளில் ஏனோ
இனம் புரியா கலக்கம்....!!
கிஞ்சித்தும் கவலை வேண்டாம்
மஞ்சு விரட்டில் வெற்றி மாலை சூடி
உந்தன் கழுத்தில் மணமாலை சூடி
வஞ்சி உன்னை கரம் பிடிப்பேன்...!"
--கோவை சுபா
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
