மலடிஅகுழந்தையின்மை
எந்தக் குழந்தையையும்
மடியில்
அமரவைத்துக்கொள்கிறேன்
கருப்பை
காலியாயிருப்பதால்
எந்தைக்குழந்தையையும்
நெஞ்சோடு
அணைத்துக்கொள்கிறேன்
பால்சுரக்கா
முலையின்மீது
எந்தக் குழந்தையையும்
கைகளில்
ஏணைப்போல்
ஏந்திக்கொள்கிறேன்
அடிவயிற்று தொட்டிலில்
ஆராட்டாதஆசையில்
எந்த ஆணைக் கண்டாலும்
பிள்ளைக்காக ஏங்குகிறது
விதைசரியில்லையா?
விதைத்தவன்
சாரியில்லையா?
களர்நிலமா?என்று
கண்கலங்குகிறது
உணர்ச்சியை கொடுத்தவன்
உற்பத்தியை
கொடுக்கவில்லை
என்தவறா?
என்புருசன்தவறா?
எந்தசாமியின்தவறு?
மலடியாய்
நான் மரித்துபோவதற்கு?
ஆசைதீர
பார்த்ததுண்டு
அன்புக்குஏங்கியதுண்டு
தாலாட்டுபாட
தவித்ததுண்டு
காதில்
மழலைமொழி கேட்க
துவந்ததுண்டு
தவழ்ந்து
நடப்பதைக்கண்டு
தாங்கொணா
வருத்தமுண்டு
ஒவ்வொருஇரவும்
ஈரத்தால்
தலைணையோரம்
நனைந்ததுண்டு
இறுதியில்
இறப்பது
இத்துபோனகண்களாலா?