எங்களூர் எழில்மிகுந்த சோழ வந்தான் - எண்சீர் ஆசிரிய விருத்தம்
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
எங்களூர் எழில்மிகுந்த சோழ வந்தான்
..எழிலான குணங்களுமே எங்க ளுக்கு;
தங்ககுண நல்லோரும் தாங்கு கின்ற
..தருமமிகு மக்களுமே இங்கே உண்டு!
சங்கமதில் தமிழ்படித்தோம் சகல ருக்கும்
..சாற்றுகின்ற நல்லனவே கற்றுத் தந்தோம்;
எங்களூரில் வைகையதன் இன்ப பூமி
..எழிலுறவே வாழ்கின்றோம் இன்பம் சேர்த்து!
- வ.க.கன்னியப்பன்