இருட்டுனு தெரியாம போச்சே

டேய் கந்தா....
@@@@@
உஷ்... பாட்டி கந்தன் தாத்தா பேரு. எனக்கு ஏன் அந்தப் பேரை வச்சீங்க? என் பேரைக் கேட்டா எல்லாம் ஏளனமாகப் பாக்குறாங்க. அதனால என் பேரை 'கந்தேஷ்'னு பாத்திட்டேன். இனிமே என்னை அந்தப் பேரைச் சொல்லித்தான் கூப்பிடணும்.
@@@@@@
அது சரிடா கந்தேசு, உங் கொழந்தைக்கு இருட்டுனு பேரு வச்சிருக்கிறாயாமே? நெசமா? அதுக்கு பதிலா 'இருளாயி'னு வச்சிருக்கலாமே!
@@@@@@
என் குழந்தை பேரு 'இருட்டு இல்லை'. 'நிஷா'. அழகான இந்திப் பேரு பாட்டி.
@@@@@@@
ஆமாம்டா கந்தேசு. பேரோட பொருள் தெரியாத வரைக்கும் அது மந்திரச் சொல் போல இருக்கும். பொருள் தெரிஞ்சா "இந்தப் பேரையா என் குழந்தைக்கு வச்சிட்டேன்"னு வருத்தப்படுவடா.
@@@@@@@
பொருள் தெரியாமலே அருமையான பேருன்னு எங் குழந்தைகளுக்கு 'நிஷா'னு வச்சிட்டேன். அந்தப் பேரைச் சொல்லிக் கூப்படறபோது எனக்கும் என் மனைவிக்கும் தேவாமிர்தமே காதில பாயற மாதிரி இருக்குது பாட்டி.
@@@@@@@
இருக்கும்டா இருக்கும். இந்தி ஆசிரியரை நேத்துப் பாத்தேன். 'நிசா' (நிஷா)-ன்னா இருட்டு, இரவுனு பொருளாம். சனங்களுக்கு இது தெரிஞ்சா இருட்டைப் பெத்தவனேனு உன்னைப் பாத்துச் சொல்லுவாங்கடா. அதுக்கு என்னடா கந்தேசு செய்வ?
@@@@
ஐய்யய்யோ பாட்டி. பொருள் தெரியாம அந்தப் பேரை என் குழந்தைக்கு வச்சிட்டேன். அவள் பள்ளிக்கு போற காலத்தில் 'நிஷா'வின் பொருள் 'இருட்டு'னு தெரிஞ்சா மற்ற பிள்ளைகள் எல்லாம் கிண்டல் பண்ணுவாங்களே. நான் என்ன செய்வேன்.
@@@@#@
இப்பா என்னடா கெட்டுப் போச்சு கந்தேசு. உம் மாமா பெரிய வழக்குரைஞர். அவருகிட்டச் சொன்னா நல்ல தமிழ்ப் பேரா வச்சு அந்தப் பேரை சட்டப்பூர்வமான பேரா மாத்திருவாடா.
@@@@@£
இப்பத்தான் பாட்டி எனக்கு ஆறுதலா இருக்கு.

எழுதியவர் : மலர் (28-Jan-23, 11:41 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 92

மேலே