வீட்டை வாங்க விருப்பமே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா விளம் அரையடிக்கு)

வீட்டை வாங்க விருப்பமே
..விலையைக் கேட்டால் மயக்கமே;
காட்டில் வாழக் கலக்கமே
..காட்டில் புலியுஞ் சுற்றுமே!
நோட்டம் விட்டுப் பார்க்கிறேன்
..நொய்ய துன்பம் பெருகுதே;
வாட்டி வதைக்கும் மனைவிசொல்
..வகையா யில்லை என்பனே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jan-23, 7:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே