சொல்லுச்சா சொல்லுச்சா வெள்ளக்கோழி

🐔🐔"தெருதெருவா சுத்தும் போது என்ன            
            தான் சொல்லுச்சா வெள்ளக்கோழி ?

            நான் ஊர்கோலம் சுத்துற என்று
            தான் சொல்லுச்சா வெள்ளக்கோழி !
             -*-*-*-*-*-*
            சுடுதண்ணியில அமுக்கும் போது    
            என்ன தான் சொல்லுச்சா   
            வெள்ளக்கோழி ?
           
            சுடுதண்ணிப் போட்டு குளிக்கிற
            என்று தான் சொல்லுச்சா   
            வெள்ளக்கோழி !
             -*-*-*-*-*-*
            றக்கய விரிக்கும் போது என்ன தான்
            சொல்லுச்சா வெள்ளக்கோழி ?
  
            நான் சோப்பு போட்டு
குளிக்குற என்று தான்
சொல்லுச்சா வெள்ளக்கோழி !
             -*-*-*-*-*-*
           மஞ்சள் பூசும் போது என்ன தான்   
           சொல்லுச்சா வெள்ளக்கோழி ?

           நான் மஞ்சள் போட்டு குளிக்கிற என்று   
           தான் சொல்லுச்சா வெள்ளக்கோழி !
           -*-*-*-*-*-*
          துண்டு துண்டா வெட்டும் போது என்ன
          தான் சொல்லுச்சா வெள்ளக்கோழி ?

          ஆப்ரேஷன் பண்ணிக்கின என்று தான்
          சொல்லுச்சா வெள்ளக்கோழி !
          -*-*-*-*-*-*
          எண்ணெயில போடும் போது என்ன  
          தான் சொல்லுச்சா வெள்ளக்கோழி ?

          நான் எல்லோருக்கும் உணவு தருவேன்
          என்று தான் சொல்லுச்சா    
          வெள்ளக்கோழி !
          -*-*-*-*-*-*
          வயித்துக்குள்ள போகும் போது என்ன
          தான் சொல்லுச்சா வெள்ளக்கோழி ?

          நான் புது உலகத்துக்கு போற என்று 
          தான் சொல்லுச்சா வெள்ளக்கோழி !
           -*-*-*-*-*-*🐔

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 10:11 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 36

சிறந்த நகைச்சுவைகள்

மேலே