காவலன் பாதுகாவலன்

காவலன்: நான், கண்ட ஆட்களை உள்ளே விடுவதில்லை.
பாதுகாவலன்: நான் காணாத யாரையும் உள்ளே விடுவதில்லை.

காவலன்: நான் பல கேள்விகள் கேட்டபின்தான் ஒருவரை உள்ளே அனுமதிப்பேன்.
பாதுகாவலன்: நான் சில கேள்விகளைக் கேட்காமலேயே பலரை உள்ளே அனுமதிப்பேன்.

காவலன்: நான் ஒருவரை நன்கு நோட்டமிட்டபின்தான் உள்ளே வர அனுமதி தருவேன்.
பாதுகாவலன்: நான் சிலரை உள்ளே செல்ல அனுமதித்தந்துப் பின்னால்தான் நோட்டம் விடுவேன்.

காவலன்: நான் சிலரைக்கேள்விகள் கேட்காமலேயே உள்ளே அனுப்பிவிடுவேன்.
பாதுகாவலன்: நான் கேள்வி எதுவும் கேட்கலாமலேயே பலரை வெளியே அனுப்பிவிடுவேன்.

காவலன்: நான் யாரென்று இதுவரை யாரும் கேட்டதேயில்லை.
பாதுகாவலன்: நான் யார் என்று பலமுறை நானே கேட்டிருக்கிறேன்.

காவலன்: நான் யார் என்று கேள்வி கேட்க நீ யார்?
பாதுகாவலன்: 'நீ யார்' என்று கேள்வி கேட்க நான் யார்?

காவலன்: சில கேள்வி கேட்பதால் எனக்குப் பல சிக்கல்கள்
பாதுகாவலன்: பல கேள்விகள் கேட்பதால் எனக்குச் சில சிக்கல்கள்

காவலன்: நான் திருடர்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை.
பாதுகாவலன்: நான் உள்ளே இருக்கும் எல்லாத் திருடர்களையும் வெளியே விடுகிறேன்.

காவலன்: எவ்வளவு கேள்வி கேட்டாலும் யார் திருடன் யார் நல்லவன் என்று தெரியவில்லை.
பாதுகாவலன்: நம் இருவரில் நல்ல திருடன் யார் கெட்ட திருடன் யார் என்பதுதான் தெரியவில்லை.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (2-Feb-23, 3:08 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 34

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே