பின்னாலே செய்வது சரியில்லை

அலுவலகத்தில்

அதிகாரி: முன்னாலே செய்யவேண்டியதைப் பின்னாலே செய்வது சரியில்லை என்று நான் முன்னாலேயே சொன்னதை நீ பின்னே காதில் போடவில்லையா?

ஊழியர்: சார், பின்னாலே செய்யவேண்டியதை முன்னாலேயே செய்வதுதான் நல்லதுன்னு , இதற்கு முன்னாடி சொன்ன உங்களை நான் ஒரு முன்னோடியாக வைத்துக்கொண்டு அதற்குப்பின்னால் தான் எந்த ஒரு வேலையும் செய்கிறேன்.

அதிகாரி: நான் சொல்வது உன் சட்டைப் பித்தானை. ஒரு பட்டன் வச்சு பின்னாலே தைத்துக்கொள்ளாமல் அந்தப் பின்னையே பட்டனாக பித்தானுக்கு பதில் குத்தி வச்சிருக்கியே அது நல்லா இல்ல.

ஊழியர்: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Feb-23, 6:34 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 68

மேலே