கல்யாணச் சிரிப்பு வெடிகள்
ராயன்: என்ன காத்தவராயா, உங்க வீடு மாப்பிள்ளை என்ன திடீர் பல்டி அடிக்கிறார். சென்னையில் கல்யாண ஏற்பாடு எல்லாம் பண்ணப்பிறகு, இப்போ "இல்லை இல்லை எனக்குத் திருநெல்வேலியில்தான் கல்யாணம் நடக்கவேண்டும்" என்று பிடிவாதம் பிடிக்கிறாரே?
காத்தவராயன்: எல்லாம் இந்தப்பொண்ணு வீட்டில செஞ்ச பிரச்சினைதான். சமையல் மெனுவில் மாப்பிள்ளை அழைப்பு அன்று இரவு திருநெல்வேலி அல்வா என்று போட்டுவிட்டனர். மாப்பிள்ளைக்கு ஏற்கெனவே அல்வான்னா நிறைய பிடிக்கும். திருநெல்வேலியிலேயே கல்யாணம் பண்ணா ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா கிடைக்கும் , அதிகமாகவும் கிடைக்கும் என்று கற்பனை செய்துகொண்டு "எனக்கு கல்யாணம் திருநெல்வேலியில் தான் நடக்கவேண்டும் என்று பெண் வீட்டாருக்கு அல்வா கொடுக்கிறார்.
ராயன்: ???
&&&
காத்தவராயன்: இதோ கேட்டியாடா ராயா, மாப்பிள்ளை இப்போ இன்னொரு ஸ்டண்ட் பண்ணுறார்.
ராயன்: அது இன்னாப்பா ஸ்டண்ட்?
காத்தவராயன்: மாப்பிள்ளைக்கு இந்த முடிச்சி போடுற வேலையெல்லாம் பிடிக்காதாம், அதனால அவருடைய நண்பர் 'பொன்முடிச்சி' என்பவர் தான் பொண்ணு கழுத்தில் இவருக்கு பதில் தாலி காட்டுவாராம்.
ராயன்: ???
&&&
ராயன்: இது என்ன அநியாயம், வரதட்சிணை வாங்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போ ரெண்டு லட்சம் ரூபாய சுளையாக மாமனானரிடமிருந்து சுருட்டிட்டாரே இந்த மாப்பிள்ளை?
காத்தவராயன்: கொஞ்சம் மெதுவாப்பேசுப்பா. மாப்பிள்ளைக்காதில் வரதட்சிணை என்ற சொல் கேட்டாலே கேட்ட கோபம் வருமாம்.
ராயன்: நீயும் என்ன அவருக்கு வக்காலத்து வாங்கறே, மாமனாரிடம் இவர் வாங்கிய ரெண்டு லட்சம் வரதட்சிணை இல்லாமல் வேறு என்னவாம்?
காத்தவராயன்: மாப்பிள்ளை என்ன சொல்றாருன்னா " வரதட்சிணை வேண்டாம் வேண்டாம் வேண்டாம் தான். ஆனால் ஆசையாக மாமனார் தரும்தட்சிணை ஒருபோதும் வரதட்சிணையாகாது. அது வெறும் தட்சிணை தான்".
ராயன்: ???
&&&&