பிள்ளையாரை வணங்கிடுவோம் 🐘

🐘🐘"பிள்ளையாரை வணங்கிடுவோம்
  நலமாய் வாழ துணை இருப்பார் என்று
  பிள்ளையாரை வணங்கிடுவோம்
  வினைகளை விரட்டும் வித்தக விநாயகா !
  கணங்களும் குணங்களும் நிறைந்தவரே என்று
  பிள்ளையாரை வணங்கிடுவோம்
  இகழ்ச்சியும் புகழ்ச்சியும் வேண்டாமென்று
  எளிமைக்கு வித்திடும் மூஷிக வாகனனே !
  நேற்றைய நாள் வரை சுகத்தைத் தந்தார் என்று
   இன்றும் என்றும் மனதில் வைத்து
   பிள்ளையாரை வணங்கிடுவோம்
   உயிர் தருவாய் நலம் தருவாய் நல்ல மனந் தருவாய்
  குணந் தருவாய் குரு தருவாய் நினைவு நல்லது தருவாய்
   ஞானந் தருவாய் தெளிவினைத் தருவாய் ஒளி தருவாய்
  சுற்றந் தருவாய் நற்துணை தருவாய் என்று
  வாழ்க வாழ்க என்று வாழ்த்திடுவாய் என்று
  பிள்ளையாரை வணங்கிடுவோம்
  கணபதியைப் போற்றிடுவோம்
  குணநிதியை வரவேற்கின்றோம்......"🐘🐘
 

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Feb-23, 11:18 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 37

மேலே