எந்நாளும் என் தேவனே 💒

🙏👪 "வழியான என் தேவனே !
            துணையாக வருவார் என்றும்
            பெலனானவர் என் அரணானவர் !
            என்றென்றும் எனை விட்டு விலகாதவர் !
       அல்லேலூயா ! அல்லேலூயா !    
       அல்லேலூயா ! அல்லேலூயா !
             பயம் எந்தன் வாழ்வில் இல்லை

            நிழல் கூட எனை பிரியும் நேரமுண்டு !
            நிலையான மலைகூட அசைவதுண்டு !
            அசையாது அவர் கிருபை !
            அழியாது அவர் மகிமை !
       அல்லேலூயா ! அல்லேலூயா !    
       அல்லேலூயா ! அல்லேலூயா !

            கருவில் நான் உருவாகிய நாள்    
            முதலாய் !
            கருத்தாக எனை காத்த கர்த்தரிவர் !
            இருள் என்னை சூழ்ந்த போதும்
            ஒளியாகி துணையானவர் !
       அல்லேலூயா ! அல்லேலூயா !    
       அல்லேலூயா ! அல்லேலூயா !

            முள்ளான பாதையில் நான் செல்லும்   
            போதும்
            கல்வாரி அனுபவம் தான் காணும்   
            போதும்
            என் இயேசு உடன் இருப்பார் !
            என் பாரம் அவர் சுமப்பார் !
      அல்லேலூயா ! அல்லேலூயா !    
      அல்லேலூயா ! அல்லேலூயா ! "🙏👪

எழுதியவர் : சென்னை பல்லாவரத்தில் உள்ள St.Theresa's Girls He.Se.School இல் பாடுகின்ற பாட்டு (1-Feb-23, 11:09 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 54

மேலே