ஆறுமுகமும் ஏறுமுகமும் ஒன்று

"ஏறுமுகம் ஆறுமுகம் மயில் வாகனன் முகம் ஒன்று
 கவலைகள் நீக்க கண்ணால் போக்கும் இறங்கு முகம் ஒன்று
 யானை தலை வாழும் கலை இளவல் முகம் ஒன்று
 சிவன் பாதி மறுபாதி உமைமைந்தன் முகம் ஒன்று
 கற்றறிந்த மொழியாலே காப்பாய் எமை இங்கு
 எளியோரைக் காத்தருளும் எளிமை முகம் ஒன்று
 அனைவருக்கும் அன்னம் புகட்டும் அன்னை முகம் ஒன்று
 சின்னஞ்சிறு கையாலே அருள் புரியும் கருணை முகம் ஒன்று
 உறையும் வீரநடை பார்க்கும் படை காட்டும் வீரமுகம் ஒன்று
 அழைத்தவருக்கு ஓடி வரும் வடிவழகன் குழந்தை முகம் ஒன்று
 கைகட்டி வாய் பொத்திய அப்பனுக்கு ஞானம் சொன்ன ஞான முகம் ஒன்று
 வாழும் கலை பழனியில் வாழும் சிலை பிள்ளை முகம் ஒன்று
 ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வேல் வேல்
 ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வேல் வேல்."

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Feb-23, 11:22 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 42

மேலே