எங்கும் சிவநாமமே சிவமயமே

🌹"ஓம் நமச்சிவாய நாமனே !
  நாமம் சொல்ல நாளும் போற்றிட
  நாமும் மகிழ என்றும் சிவ நாமமே
  பிறப்புக்கும் இறப்புக்கும் உறவை வைத்தான்
  இறப்புக்குள் பிறப்பாய் உன்னை வளர்த்தான் என
  முக்கண்ணுள் மூவுகலமும் அடங்கிட
  தில்லை நாயகனே ! திரிபுர வாசவா !
  திருவாலங்காட்டுக் காவலா ! என்னுள் சுவாசவா !
  பாதாதி கேசனாய்
  மண்ணும் விண்ணும் பொய்த்திட
  கேசாதி பாதமாய்
  உலகம் மாயையின்றி வாழ்ந்திட
  காலத்தின் முதல்வனே ! காலனின் தலைவனே !
  காலம் தாழ்த்திட காலனை வீழ்த்திட
  காலனை வீழ்த்தி முக்காலமும் உணர்த்தி
  நேர்கொண்ட பார்வையும் வீறு கொண்ட சேனையும் பெற்று
  எதிர்ப்பவனை எறிந்து
  அழிப்பவனை எரித்து
  உமையம்மையின் நாதனே ! இமைப்பொழுதின் வேந்தனே !
  அருள் புரிவாய் ஆனந்தம் கொள்ள
  அணைக்க வருவாய் ஆறுதல் சொல்ல
  இன்னல் நீங்க அன்னம் செய்வாய்
  'என்னுள் உள்ளோர்க்கு என் உள்ளம் கொடுத்து
 என் இல்லம் இல்லார்க்கு இட்டதைப் பகர்ந்து'
  என வாழ்த்திட
  நன்மை சேர்ப்பாய் நலமும் சேர்ப்பாய் என
  பாடி பாடி போற்றிடுவோம் நாம்
  பாடி பாடி போற்றிடுவோம் நாம்
  என்றும் சிவநாமமே எங்கும் சிவமயமே
  என்றும் சிவநாமமே எங்கும் சிவமயமே."🌹

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Feb-23, 11:38 am)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 75

மேலே