என்னுள் சுவாசவா என் வாசல் வா

"🌻என் சிவனே ! குரு சிவனே !
        என் சிவனே ! மலை சிவனே !
  🌻அருஉருவமாய் தெரிவாய் வரமாய்   அருள்வாய் மறைவாய்
  சுடராய் நின்றாய் நாளும் அசைந்திடுவாய்
  🌻அணுவுக்கும் தூணுக்கும் மூச்சுக்கும் பேச்சுக்கும் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளி தருவாய்
 🌻பிறப்புக்கும் இறப்புக்கும் உறவுக்கும் அன்புக்கும் வழிவகை நல்ல செய்திடுவாய்
 🌻தில்லை கூத்தனே ! முக்கூடல் நாதனே! அபிஷேகப் பிரியனே ! மதுரை ராஜனே ! உன் திருவிளையாடல் அரங்கிலே என்னையும் சேர்ப்பாய் சதாசிவா !
 🌻உலக மாயையைக் கலைக்க வா ! நாம் மண்ணாய்ப் போகும் திருச்சாம்பலைப் பூசியே இடுகாட்டில் ஆனந்த நடனம் புரிந்திடுவாய் !
 🌻தவறுக்கு தண்டனை கொடுத்திடுவாய் !
      இல்லை ருத்ரதாண்டவம் ஆடிடுவாய் !
 🌻நன்மை நலமென்று தீமை கேடென்று  அகம் பேசும் மனிதனைக் காத்திடுவாய் !
     உண்மை பொய்யென்று பொய் உண்மையென புறம் பேசும் கயவர்களை மாய்த்திடுவாய் !
  🌻என்னுள் பாதி உமையம்மையென்று சரிநிகர் சமானம் காட்டிவாய் !
      நந்தி வாகனா ! காலன் தலைவனா ! கலியுக வரதனா ! நாளும் போற்றவா ! நன்றி சொல்ல வா !
 🌻தட்சனின் மருமகனே ! தாட்சாயணியின் தலைமகனே ! நீலகண்டனே ! நீள ரூபனே ! நிழலாய் என்றும் நீ துணை இருப்பாய் !
 🌻முருகப்பன் பாடம் சொல்ல காதால் கேட்டு உலகுக்குக் காட்ட தலையை அசைத்திடுவாய் !
     எளிமை நாயகா ! ஏழைக்கும் நாயகா ! உன் மகனும் விநாயகா ! எளிமை விநாயகா !
 🌻சிவனே என்று இருந்தாலும் சிவநாமம் சொன்னாலும் சிவனருள் நமக்குக் கிடைத்திடுமே
 🌻கங்கை முடி தாங்கிய கங்காதரா !
      பரம்பொருள் காட்டும் பரமேஸ்வரா !
      தென்திசை எரித்தவனே ! காமனை எரித்தவனே !
  🌻அடியும் முடியுமாக நின்றாய் ! அடங்கா நெஞ்சினை ஆட்டி வைத்தாய் ! பிறப்புக்கும் இறப்புக்கும் உறவை வைத்தாய் ! பிறப்புக்குள் இறப்பாய் என்னை வைத்தாய் !
 🌻என் சிவனே ! என் சிவந்தவனே ! என் பரமே ! என் பரந்தவனே !
     என் சுவாசவா ! என் வாசல் வா !
 🌻என் சிவனே அருட்சிவனே !
 🌻என் சிவனே நமசிவாயனே !
 🌻என் சிவனே குரு சிவனே !
 🌻என் சிவனே மலை சிவனே !

எழுதியவர் : சு.சிவசங்கரி (1-Feb-23, 11:47 am)
சேர்த்தது : சுசிவசங்கரி
பார்வை : 22

மேலே