உலகம் பேசும்
நேரிசை ஆசிரியப்பா
மிருகம் செத்தும் தோலைத் தருமடா
அருமை மனிதன் சாக செய்த
நற்பணி உலகம் பேசு மப்பா
நல்ல தகப்பன் விட்டுச் சென்ற
நல்லொ ழுக்கப் பிள்ளை சொல்லும்
நல்ல சமுதா யங்கெட அழியும்
சந்ததி ஆகவேத் தமிழா கண்ட
நாயின் பின்னே சென்று தமிழின்
சமுதா யத்தை அழிய
விடாதே காத்திடு தமிழா காத்திடே
...