மகிழ்வை தொலைத்த மனிதன்
மகிழ்வைத் தொலைத்த மனிதன்!
கொட்டிக் கிடந்த மகிழ்வெல்லாம்
எங்கோ தொலைத்த
ஜீவன்களாய்
அதைத் தேடிப் பெற்றிட
ஆளாய்ப் பறந்துகொண்டிருக்கிறது மனித இனம்!
சோலைவாழ் வண்டுகளும்
பூச்சிகளும்
வண்ண மலர்களில் கூடியே
களித்து ரீங்காரம் செய்து
நமைப் பார்த்து
ஏலனமாய் சிரிக்கிறது!
நாகரீகம் என்றெண்ணி
தனைக்கொண்ட வாழ்வதனை
தூக்கியே வீசி
புது வரவு கண்டு
தனையழித்து
பெருமை பூசி
வெறுமையாய் அலைகிறான்
மனிதன்!
சந்தோசங்களைத் தூசாய் தூக்கி வீசி
பரதேசியாய் புலம்பி அலையும்
மாந்தர் நிலை கண்டு
இயற்கையும்
இப்போதெல்லாம் இடைக்கிடை
அழுகிறது!