வான்-மேகம்-ஆண்டவன்

நீல வானம் என்கின்றோம் விண்ணை
காண முடிகின்றது தொட முடியலையே
விண்ணைத் தொட்டுவிட நீர்மேகத்திற்கும்
ஆசை அன்றும் இன்றும் என்றுமே
தொட முடியலையே இப்படித்தான்
படைத்தவனும் எல்லாப் படைப்புகளிலும்
காண கிடைக் கின்றான் காண்போருக்கு
'அவனை' பக்தர் அல்லார் என்றுமே
தொட்டுவிட முடி வதில்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (12-Feb-23, 1:47 pm)
பார்வை : 44

மேலே