கடவுளின் பிள்ளைகள்
தாகத்தோடு திரிகின்ற புத்தருக்கு மோர்
கொடுப்போம்
இசக்கியின் இடுப்பில் இருக்கும் குழந்தையைக் கொஞ்சுவோம்.
சுடலைமாடன் வேட்டைக்குச் செல்கையில் தண்ணீர் கொடுப்போம்.
இருளப்பனோடு பாண்டி விளையாடுவோம்.
ராவணனிடம் கண்தானத்தின் அவசியத்தை எடுத்துரைப்போம்.
காய்ச்சலில் இருக்கும் நபிகளுக்கு மருந்து கொடுப்போம்.
சிலுவையைச் சுமக்கும் இயேசுவுக்கு அப்பமும் மீனும் ஊட்டிவிடுவோம்.
"ஆராரோ ஆரிராரோ"
கடவுளைத் தூங்கவைப்போம்.