கடவுளின் கையாள்

அன்று பள்ளிக்கூடம் முழுதும் என்னைப் பற்றிய பேச்சுத்தான்

என் சத்துணவு முட்டையில்
இரண்டு மஞ்சள் கரு!
-------------------------------------------------
தம்பி!
"ஆம்பள வரிசையில்தான் கூட்டம் கம்மியா இருக்கு"
நீ உனக்கு வாங்கிட்டு அப்புறமா எனக்கும் வாங்கித்தா
"அஞ்சு ரூபா தாரேன்" என்றபடி
எனக்குள் லஞ்சத்தை அறிமுகப்படுத்தினார்கள்
எங்களூர் ரேஷன்கடைப் பெண்கள்.
-------------------------------------------------
"இன்றைக்கு வியாபாரம் நல்லபடியா நடக்கணும்" என்று
இறைவனிடம் வேண்டிக் கொள்ளாத வியாபாரிகளுள் சவப்பெட்டி செய்பவர்களும் அடக்கம்.
-------------------------------------------------
நண்பா!
என் இறப்பிற்குப் பின்னால் நீயேனும் சொல்வாயா?

"நல்ல மனுஷன்
கூட கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்" என்று..
-------------------------------------------------
அநாதை இல்லத்துக் குழந்தை
ஆதாமுக்கு ஓர் கடிதம் எழுதியது.
ஆதாமே!
உன்னைப் போலவே எனக்கும் அப்பா அம்மா யாரும் இல்லை..

எழுதியவர் : திசை சங்கர் (6-Feb-23, 11:05 am)
சேர்த்தது : THISAI SANKAR
பார்வை : 46

மேலே