ஒரு திரில்லுக்காக

ஆக்ஸிலேட்டர் முறுக்கி
காற்றின் காது கிழிக்கலாம்;

கவிதைகளுடன் களமாட
கஞ்சாவில் புகையலாம்.

நீச்சல் தெரியாமலே
கிணற்றுத் தவளையாகலாம்.

வள்ளுவனைப் புறக்கணித்து
பிறன்மனை நோக்கலாம்.

பேருந்து படிக்கட்டுகளில்
வானரத் தோரணமாகலாம்.

நாய் முகத்திற்கு நேராக
நடுவிரல் காட்டலாம்.

பிராங்க் செய்து
பாதசாரிகளை மிரளவிடலாம்.

வெடிக்காத பட்டாசுடன்
விதண்டாவாதம் செய்யலாம்

இத்தகைய
சாகசங்கள் தவிர்த்து

டேஷ் டேஷ் டேஷ் -களில்
இடம்பெறாமலும் இருக்கலாம்.

எழுதியவர் : ஜ. கோபிநாத் (5-Feb-23, 8:22 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 147

மேலே