காந்தி மகான்.........

அக்டோபர் இரண்டு நமக்கு திருநாள்.
எல்லாரும் இனித்திடும் நல்லநாள்.
உலகம் நினைத்திடும் பெருநாள்.
நம் காந்தி பிறந்த பொன்னான நாள்.

போர் பந்தரில் பிறந்தார்
மோகன தாசென அழைத்தார்.
போரினை அறவே வெறுத்தார்.
போரில் இடுபடமல் புதுமை வழிகள் வகுத்தார்.

அனைவரிடமும் அன்பினை காட்டி
வலிமை கண்டார்.
மக்கள் அனைவரும் சமமெனக் கொண்டார்.
வன்முறை கேடு என்றார்.
வல்லரசு தன்னையே வென்றார்.

காந்தி தலைமை ஏற்றார்.
மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.
அதனை
கண்டு வெள்ளையர் மிகவும் மிரண்டனர்.
விடுதலை தந்து பறந்தார்கள்.

மகாத்மா வாக உயர்த்தார்.
மக்கள் உயர உழைத்தார்
சகாப்த மொன்று படைத்தார்.
சத்தியம் வெல்ல வைத்தார்.
நம் மகாத்மா காந்தி.

எழுதியவர் : g .m .a .kavitha (11-Oct-11, 7:16 pm)
பார்வை : 8225

மேலே