இப்படியே இருக்கட்டும்
இப்படியே இருக்கட்டும்.
என்மனதில் உள்ளது
உனக்கு தெரியாது,
உன் மனதில் உள்ளது
எனக்கு தெரியாது,
இது இறைவன் நமக்கு அளித்த வரம்.
இல்லை எனில்?
குடும்பத்தில் அமைதி எங்கே!
நண்பர்கள் எங்கே!
மனதில் அமைதி எங்கே!
ஏன்? உலகில் தான் அமைதி எங்கே!
இதை எண்ணி,
நாம் எல்லோரும்
மகிழ்ச்சி கொள்வோம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.