அடி , அடியாய்
கவிதை நேரம்
"அடி , அடியாய் "
காட்சியின் கோலங்கள்
குழாய் அடியில் ,
குடங்கல் காத்திருக்கின்றன;
தண்ணீர் தாமதம் !
***********************
அனுபவம் கடவுள்
உணர்ந்தது இன்று ;
உணர்ந்த பின் நேற்று;
உணர துடிப்பது நாளை !!
*****************
கார்மேகங்களின் பட்டின பிரவேசம்
வாகனங்கள் அணிவகுத்து காத்து இருக்கின்றன;
வானத்தை நோக்கி,
மேம் பாலத்தில் ...........
**************
வாழ்க்கை ஒரு உண்மை சம்பவம்.
வாழவே பிறந்தோம் !!!!
வாழ்ந்தே காட்டுவோம் ???
கேள்விகளை வேள்விகளாக ஆக்குவோம் ;
ஆச்சிரியங்களை அனுபவங்களாகபெறுவோம்.
அனுபவத்தை ஆனந்தமாக்குவோம்.
*******************