பலக்

ஏனுங்க மூத்த பையனுக்கு 'திலக்'னு இந்திப் பேரை வச்சுட்டோமுங்க.
@@@@@
உம். சொல்லு புள்ள.
@@@@@
மூணு வருசம் கழிச்சு (இ)ரெண்டாவது கொழந்தையும் பையனுங்க. அவனுக்கு பேரு வைக்கிறதப் பத்தி நீங்க கவலைப்படற மாதிரி தெரியலீங்களே!
@@@@@@
அட, சும்மா இரு புள்ள. உனக்கு மட்டும் தான் அவன் கொழந்தையா? இத்தனை வருசம் எங்கூட குடித்தனம் நடத்தியும் நீ என்ன இன்னும் புரிஞ்சுக்கலயே.
@@@@@@@
ஏனுங்க என்ன சொல்றீங்க?
@@@@@@
பையன் பொறந்த அடுத்த நாளே ஊராட்சில அவன் பேரைப் பதிவு பண்ணீட்டேன் புள்ள.
@@@@@@
அப்பிடீங்களா? என்ன பேருங்க?
@@@@@@@@
மூத்தவன் 'திலக்'. நம்ம சோசியருகிட்டக் கேட்டேன். 'திலக்'குக்குப் பொருத்தமா (இ)ரெண்டாவது பையனுக்கு 'பலக்'னு பேரு வைக்கச் சொன்னாரு புள்ள.
@@@@@@@
நல்ல பொருத்தமான பேருங்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@################################
Palak = Eye lid. Indian origin. Unisex name.

எழுதியவர் : மலர் (13-Feb-23, 9:01 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 32

மேலே