ஆசையாய் திரும்பிப் பாரு

மன்னார் ராஜ் எழுதிய உரைநடையை வெண்பாவாக்கி
காட்டியுள்ளேன்...

இப்படி எழுத பழைய யாப்பு பாதுகாக்கப் படும் என்ற நப்பாசையில் எழுதினேன். ராஜும் முயலலாம், தமிழை வளர்க்கலாம் ராஜ் எழுதிய வரிகள்

பூனைகள் தன் எஜமானனுக்கு
தன்னுடைய அளவற்ற அன்பை வெளிப்படுத்த முயற்சிக்கின்றன
நாம் அதை உதாசீனப்படுத்தினாலும்
அது தொடர்ந்து தன் அன்பை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது...

என்னவளே....
நானும் அந்தப் பூனைப்போலவே
என் நிபந்தனைகளற்ற காதலை
சுமந்துக்கொண்டு உன்னையே
சுற்றிவருகிறேன.

தினம் ஒரு முறை
என்னை திரும்பியாவது பார்த்துவிடு


பழனி ராஜன் எழுதியது

நேரிசை வெண்பா

பூசை நமதுகாலைச் சுற்றியன்பை காட்டும்பார்
ஓசையின்றி தள்ளிட ஓடாது --. வேசையிலை
பூசையின் பாசமே சுற்றுமுனை பார்திரும்பி
ஆசைபாவாய் ஒர்முறை நாள்


பூசை == பூனையின் முன் பெயர்

ஓசையன்றிக் காலைச் சுற்றி சுற்றிவந்து அன்பை வெளிப்படுத்தும் பூனையை எட்டி உதைத்தாலும் காலையே சுற்றும். அந்த பூனைபோல்
நான் உன்னை சுற்றி அலைகிறேன். நீ தினமும் ஓர் முறையாகிலும் திரும்பி எனைப்பாரும்


......

எழுதியவர் : பழனி ராஜன் (18-Feb-23, 9:24 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 58

மேலே