காதலில் இது எந்தவகை

அன்பே...
ஒவ்வொரு நாளும்
உன் கண்கள் விழித்து
மீண்டும் உன் கண்கள் மூடி
நீ உறங்கும் வரையில் உள்ள மணித்துளிகளில்
உன் தேவைகளையெல்லாம்
பூர்த்தி செய்து
உன்னைக் கண்ணும் கருத்துமாக
பார்த்துக்கொள்ளும்
ஒரு தாயாக ஒரு சிநேகிதியாக
உன்னோடு இருக்க நினைக்கிறது
என் மனம்...
ஒருவேளை
என்னைவிட உன்னை
அன்பாகவும் பாதுகாப்பாகவும்
அக்கறையாகவும் பார்த்துக்கொள்ள
வேறொரு ஜீவன் உன்னை விட்டுக்கொடுக்க கேட்டாலும்
நான் விட்டுக்கொடுத்துவிடுவேன்
நீ சம்மதித்தால்
என்னவளே...
உன்மீது நான் கொண்ட காதலை
என்னவென்று சொல்வது....
இது எந்தவகையான காதல்
உனக்குத் தெரிந்தால் எனக்கும் புரியவை அன்பே...
புரியவை...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Feb-23, 9:27 am)
பார்வை : 167

மேலே