கண்ணீருடன் காதல் மடல்
கண்ணீருடன் காதல் மடல்கள்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மேகத்தின் மீதினிலே
மோகத்தில் எழுதுகிறேன் /
தாகத்தைத் தணிக்கின்ற
தண்ணீராய் விழுகின்றாய்/
காகிதத்தில் எழுதுகின்றக்
காதலெல்லாம் கவிதைகளே /
போகியிலே கொளுத்திவிட்டுப்
போவதெல்லாம்
குப்பைகளே /
விழியோரம் கசிந்துவரும்
வெந்நீரில் வழுக்கியநான்/
பழியறியா பாவையவள்
பாசத்திலே வீழ்ந்தேனே/
மகிழ்ச்சியினைப்பொழிகின்ற
மந்திரமோ தந்திரமோ /
இகழ்ச்சியினை புகழ்ச்சியென மாற்றுகின்றப் பேரன்பே/
உனைநினைந்து வரைகின்ற
மடல்களிலே கண்ணீர்த்துளி /
தனைமறந்து பொங்கிவரும்
தாளாத ஆனந்தமாய் //
-யாதுமறியான்.