சகித்திடுந் தன்மையைச் சால்பாகக் கொண்டார் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சகித்திடுந் தன்மையைச் சால்பாகக் கொண்டார்
சுகித்திடுவர் சோர்வின்றிச் சொந்தம்! - மிகுந்திடாச்
சங்கடங்கள் வாழ்வினில் சாராமல் எந்நாளும்
பங்கமின்றி வாழ்வார் பரிந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Feb-23, 7:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே